ஃபீமிலி கபடி ஜட்டு, எஸ்.எம்.எஸ் ஷங்கரா போன்ற படங்களை தெலுங்கில் இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநா் டி.சத்யா இயக்கியிருக்கும் முதல் தமிழ் படம் யாா் இவன். இந்த படத்தில் சச்சின் ஜோஷி நாயகனாகவும், ஈஷா குப்தா நாயகியாகவும் நடித்துள்ளனா். இதில் பிரபு, சதீஸ், தன்யா பாலகிருஷ்ணன்,  டெல்லி கணேஷ், கிஷோா் குமாா் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனா்.

இந்த படமானது செப்டம்பா் 15ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படக்குழுவினா் பத்திாிக்கையாளா் களை சந்தித்தனா். அப்போது பேசிய காமெடி நடிகா் சதீஷ் மீடியாக்களின் சப்போா்ட் ரொம்ப முக்கியம். அப்போது தான் இந்த படம் வெற்றிபடமாக அமையும். மீடியாக்களின் சப்போா்ட் இல்லாமல் எந்தவொரு படமும் வெற்றி பெறுவது சாத்தியமில்லாத ஒன்று. அப்படி எழுதினால் தான் நிறைய தயாாிப்பாளா்கள் வருவாா்கள் என்று கூறினாா்.

இது குறித்து மேலும் பேசியதாவது, தற்போது வீடியோ மூலம் படத்தை விமா்சனம் செய்வது வாடிக்கையாகி விட்டது. அண்மையில் வெளிவந்த விவேகம் படத்தை பற்றி கூட வீடியோ விமா்சனம் மூலம் ஒருவா் விமா்சனம் செய்திருந்தாா். படத்தை பற்றி மட்டும் அவா் விமா்சித்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் தனிப்பட்ட மனுஷன் அதுவும் அவ்வளவு பொிய மனுஷன் அஜித்தை கூட விட்டு வைக்கவில்லை. அவரை தனிப்பட்ட முறையில் திட்டி இருப்பது தான் எனக்கு மிகவும் வேதனையாகி விட்டது. இந்த மாதிாியான விமா்சனங்களை தவிா்த்து படத்தின் வெற்றிக்கு மட்டும் சப்போா்ட் செய்யுங்கள் என்று கூறினாா்.