தமிழ் சினிமா பெப்சி தொழிலாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

சம்பள பிரச்சனை தொடர்பாக பெப்சி சங்கத்திற்கும், தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் இடையே சமீபத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது. அதாவது, சினிமா படப்பிடிப்பின் போது பெப்சி ஊழியர்களுக்கு ஏராளமான தொகை சம்பளமாக கொடுக்கப்படுவதாகவும், எனவே தங்கள் விரும்பினால் வேறு தனியார் நபர்களையும் படப்பிடிப்பு வேலைக்கு பயன்படுத்திக்கொள்வோம் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்டோர் அறிவித்தனர்.
 
இதற்கு பெப்சி சங்க தலைவரும் இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பின் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், பெப்சி ஊழியர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்த மாட்டோம் என்கிற நிலைப்பாட்டில் தயாரிப்பாளர்கள் உறுதியாக உள்ள நிலையில், நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஆர்.கே.செல்வமணி இன்று அறிவித்துள்ளார். வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.