நடிகர் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் இரண்டாம் பாகம் தற்போது நடைபெற்று வருகிறது. சென்றமுறை சிறப்பான வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தமுறை தற்போதுதான் பிக்கப் ஆகியிருக்கிறது.

இதில் இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியின் புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் நீலம், ஆரஞ் என இரண்டு அணியாக பிக் பாஸ் வீட்டிலுள்ளவர்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இரு அணியினருக்கும் இடையே காரசாரமான மோதல் ஏற்படுகிறது.

ஒரு புரோமோவில் ஐஷ்வர்யா, வைஷ்னவியிடம் ஆக்ரோசமாக கத்துகிறார். இன்னொரு புரோமோவில் டேனியலுக்கும் மகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படுகிறது. இதனால் பிக்பாஸ் வீடு பரபரப்புடனும் பதற்றத்துடனும் காணப்படுகிறது.