நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் 8வது திரைப்பட விழா வருகிற ஏப்ரல் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த திரைப்பட விழாவில் விருது பெற பல தமிழ் படங்கள் போட்டியிட்டன. இறுதியில் சில பல படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் விருது பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த படத்திற்கான விருது ஜோக்கர் படத்திற்கும், சிறந்த இயக்குனர் விருது விசாரணை படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கும் கிடைக்கவுள்ளது. மற்ற விருதுகளின் பட்டியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (தர்மதுரை)
சிறந்த நடிகை – வரலட்சுமி (தாரை தப்பட்டை)
சிறந்த இசையமைப்பாளர் – ஷான் ரோல்டன் (ஜோக்கர்)
சிறந்த தயாரிப்பு – உறியடி
சிறந்த பாடலாசியரியர் – உமா தேவி (கபாலி)
சிறந்த வில்லன் – ஆர்.கே.சுரேஷ் (தாரை தப்பட்டை)
சிறந்த துணை நடிகர் – சமுத்திரகனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை – பூஜா தேவரியா (குற்றமே தண்டனை)
சிறந்த ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.கதிர் (கிடாரி)
சிறந்த திரைக்கதை – கார்த்திக் நரேன் (துருவங்கள் பதினாறு)
சிறந்த பின்னணி பாடகர் – பிரதீப் குமார் (மாயநதி – கபாலி)
சிறந்த பின்னணி பாடகி – நந்தினி ஸ்ரீகர்
சிறந்த எடிட்டர் – ஸ்ரீஜித் சரண் (துருவங்கள் பதினாறு)
சிறந்த சமூக விழிப்புணர்வு விருது – அம்மணி
இயக்குனர் பாலுமகேந்திரா விருது – எஸ்.ஜே.சூர்யா (இறைவி)
நடிகர் கே.எஸ்.பாலச்சந்திரன் விருது – யோகி பாபு (ஆண்டவன் கட்டளை)
கலைச்சிகரம் விருது – பிரபு சிவாஜி கணேசன்
வாழ்நாள் சாதனையாளர் விருது – டி.ராஜேந்தர், ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

எனவே, விருது அறிவிக்கப்பட்ட சினிமா கலைஞர்கள் நார்வே திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அந்த விருதுகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.