சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்!

maari 2

மாரி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தனுசுக்கு காயம் ஏற்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் தனுஷ் நான் நன்றாக இருக்கிறேன் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று ரசிகா்களுக்கு தெரிவித்தார். இந்நிலையில் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுபவராக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் கலெக்டராக வருகிறார். மேலும் கிருஷ்ணா, டோவினோ தாமஸ் வில்லனாகவும், ரோபோ சங்கர், வினோத்,அஜய் கோஷ், வித்யா பிரதீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மாரி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. சண்டை காட்சி நடைபெற்ற போது தான் தனுசுக்கு காயம் ஏற்பட்டது. இதனுடன் படப்பிடிப்பு முடிவடைந்தது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் உள்ளது. அதுவும் விரைவில் படப்பிடிப்பு நடக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.