சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் மதுபோதையில் நடனமாடிய பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொண்ட டார்லிங் 2 பட இயக்குனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டார்லிங் 2 படத்தை இயக்கியவர் சதீஷ் சந்திரசேகரன். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் அங்கு நடனமாடிய பெண்ணுடன் அவர் ரகளையில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. எனவே, அப்பெண், சதீஷ் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  பாஜகவினர் ரகளை: பேட்டியை பாதியிலேயே நிறுத்திய தமிழிசை!