வாழப்பாடி சுப்பராய படையாச்சி தெருவைச்சேர்ந்தவர் சேட்டு(41). இவர் சேலம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். சேட்டுவிற்கு அம்மு(35) என்கிற மனைவியும், ஹரீஸ் (12) விக்ரம்(10) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். சேட்டு நேற்று சேலத்திற்கு பணிக்குச்சென்றார்.

நேற்று இரவு வாழப்பாடி பகுதியில் பெய்த திடீர் மழையின் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டது. வெளிச்சத்திற்காக நேற்று இரவு மெழுகுவர்த்தியை வீட்டினுள் ஏற்றி வைத்து விட்டு வீட்டின் வெளியே அம்மு, உள்ளிட்ட 2 மகன்களும் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாரதவிதமாக எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி படுக்கையில் பட்டு மளமளவென தீ பரவியது.இதில் வீடு முழுவதும் தீ பற்றி எறிந்தது. வீட்டினுள் இருந்த பொருட்கள் முற்றிலும் எறிந்து நாசமானது,இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி தீ யணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். வருவாய்துறையினர் மற்றும் வாழப்பாடி போலீசார் தீவிபத்து குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக வருவாய்துறையினர் தெரிவித்தனர்.