பற்றி எரிகிறது தி.நகர் சென்னை சில்க்ஸ். கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு

12:08 மணி

சென்னை தி.நகர் ‘சென்னை சில்க்ஸ்’ ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடையில் இன்று காலை 5 மணி அளவில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் பற்றிய தீ, மளமளவென ஏழு மாடிகளுக்கும் பரவியதால் கட்டிடத்தில் இருந்த கண்ணாடிகள் வெப்பத்தின் காரணமாக வெடித்து சிதறியுள்ளது. மேலும் கட்டிடத்தின் உள்பகுதியில் உள்ள சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கட்டிடம் அபாயகரமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Loading...

தீ விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் உடனே 6 தீயணைப்பு வண்டிகளில் வந்த சுமார் 40 தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால் புகை மிக அதிகளவில் வெளிவருவதால் தீயணைப்பு வீரர்களால் கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியவில்லை.

இந்த தீவிபத்தை சென்னை போலீஸ் கமிஷனர், சென்னை கலெக்டர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சில்க்ஸ் உரிமையாளர் தீயணைப்பு படையினர் அலட்சியம் காரணமாக தீயை கட்டுப்பட்டுத்த தவறியதாக் குற்றம் சுமத்தியுள்ளார்.

(Visited 22 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393