நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கார் விபத்து ஏற்பட்டு தாயும், தந்தையும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது ரணம் என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சார்ஜா என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிகர் அர்ஜூனுக்கு சொந்தக்காரர் ஆவார். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருக்கு அடுத்துள்ள பாகலூரு பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அப்போது, கார் ஒரிடத்தில் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்த எரிவாயு சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து சிதறியது.

அந்த விபத்தில் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணும், அவரின் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பத்தை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.