இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் சிவா நடிகர் அஜித்தை வைத்து தொடர்ச்சியாக வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது தொடர்ந்து நான்காவது படமாக அஜித்தை வைத்து விஸ்வாசம் என்ற படத்தை இயக்குகிறார். இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

வயதான தோற்றத்தை முதலில் படம்பிடித்த படக்குழு அவரது ஃப்ளாஷ்பேக் காட்சிகளை தற்போது எடுத்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் அஜித் இரட்டை வேடத்தில் உள்ளது உறுதியாகியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பி ராமைய்யா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது.

Loading...