சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை அடுத்து சூர்யா தற்போது நடித்து வரும் என்.ஜி.கே’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

‘சூர்யா 37’ என்று அழைக்கப்படும் இந்த படத்தில் சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார் என்றும் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.