வல்லரசை பிறகு பார்த்து கொள்ளலாம், முதலில் நல்லரசு வேண்டும். விஜய்

இளையதளபதி விஜய் அவ்வப்போது கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சியில் சமுதாய நலன் குறித்த கருத்துக்களை கூறி வருவது வழக்கமே. அந்த வகையில் நேற்று சென்னையில் நடந்த Behindwoods சினிமா இணையதளம் விருது வழங்கும் கலந்து கொண்ட விஜய், விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசினார்.

இந்த விழாவில் விஜய் பேசியதாவது: விவசாயப் பிரச்னைக்கு அவசியமாக மட்டுமல்ல. அவசரமாகவும் தீர்வு வேண்டும். நாம் நன்றாக உள்ளோம். ஆனால் சோறு போடும் விவசாயி நன்றாக இல்லை.

3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு நமக்கு தெரியாமல் போய்விட்டது. இப்போதும் ஆரோக்கியம் இல்லாத உணவு தான் கிடைக்கிறது. அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாத நிலையும் ஏற்படும். அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் ரேஷனில் இலவச அரிசிக்காக நிற்கிறார்கள்.

நாடு வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும் என்று விஜய் கூறினார்.