கனடாவில் ஆபாச பட நடிகையாக இருந்து பின்னர் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக மாறிய சன்னிலியோன் மனம் திறந்து ஒரு பேட்டியில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் தான் முதன்முதலாக 21 வயதில் மன நிம்மதியை இழந்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது நான் எடுத்த சில முடிவுகளால் பெற்றோர்களிடமும், மக்களிடமும் வெறுப்பை சம்பாதித்தேன்.

என் பெற்றோர் விரும்பாத திசையில் நான் சென்றேன் என்றாலும் அந்த வாழ்க்கை எனக்கு பிடித்திருந்தது. இருப்பினும் எல்லாம் ஒரு காரணத்திற்காக நடப்பதாகவே நம்பினேன்.

நான் இளவயதில் பெற்ற வெறுப்பை எனது குழந்தைகள் பெறக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். இவ்வாறு சன்னிலியோன் கூறியுள்ளார். சன்னிலியோன் நிஷா என்ற குழந்தையை தத்தெடுத்துள்ளார் என்பதும் வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது