கடந்த சில ஆண்டுகளாகவே சூர்யாவும் கார்த்தியும் நல்ல கதை கிடைத்தால் இணைந்து நடிக்க தயார் என்று கூறி வரும் நிலையில் தற்போது பிரபல இயக்குனர் ஒருவர் கூறிய கதை இருவருக்கும் பிடித்துவிட்டதால் முதல் முறையாக ஒரு படத்தில் சூர்யா, கார்த்தி இணையவுள்ளதாக கூறப்படுகிறது

உண்மையான அண்ணன், தம்பிகளாக சூர்யா, கார்த்தி, படத்திலும் அண்ணன் தம்பியாகவே நடிக்கவிருப்பதாகவும், ஆக்சன் இல்லாமல் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை இது என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் சிவகுமார் கெளரவ வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு திரையுலகினர்களின் ஸ்டிரைக் முடிந்தவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.