பாகுபலி-2 படத்தின் 5 நாள் வசூல் என்ன தெரியுமா?

சமீபத்தில் வெளியான பாகுபலி 2 படம் வசூலில் இந்திய அளவில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் பாகுபலி2. இந்தப் படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. அதன் பின் 3 நாளில் ரூ.400 கோடியை தாண்டியது. தற்போது 5 நாளில் ரூ.700 கோடியை தாண்டி இந்திய சினிமா அளவில் மிகப்பெரிய சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது.

இதுவரை இந்தியாவில் வெளியான எந்த படமும், இவ்வளவு வேகமாக இவ்வளவு பெரிய தொகையை வசூலித்ததில்லை. இதற்கு முன் அமீர்கான் நடித்த பிகே படத்தின் மொத்த வசூல் ரூ.792 கோடி என்பதுதான் சாதனையாக இருந்தது. ஆனால், பாகுபலி படம் ரூ.1000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்திய சினிமாவில் அதிக வசூல் ஆன படம் என்ற பெருமையை பாகுபலி2 படம் தட்டிச்செல்லும் என்பதில் ஐயமில்லை…