பட்டைய கிளப்பும் நாட்டுப்புறகலைகளுடன் விஸ்வாசம்

சிவா இயக்கத்தில் கடந்த முறை வெளியான விவேகம் படம் போதிய வெற்றியை பெறவில்லை என்பதால் சோர்ந்து கிடந்த அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்த மீண்டும் அதே சிவாவையே இயக்க வைத்து விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் அதே சிவாவா என ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தாலும் சிவா மாஸான இயக்குனர் அதனால்தான் நம்ம தல அவரையே திரும்பவும் இயக்க சொல்லி இருக்கிறார். ஏற்கனவே சிறுத்தை, வேதாளம்னு அட்டகாசமான மாஸ் ஆக்சன் படங்களை கொடுத்தவர் ஏதோ ஒரு முறை கொஞ்சம் சொதப்பி விட்டார் இம்முறை அப்படி செய்யமாட்டார் அப்படி ஒரு நம்பிக்கையை வைத்துதான் திரும்பவும் தல அவருக்கே வாய்ப்பு கொடுத்திருக்கார் என புரிந்து கொண்டு விஸ்வாசம் பற்றிய அப்டேட்ஸ்களை அதிகம் விரும்புகின்றனர்.

படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது.

இந்தப்படத்தில் மதுரை, தேனியை சேர்ந்த 300 க்கும் அதிகமான நாடக கலைஞர்கள் பணியாற்றுகிறார்களாம். இது நாட்டுப்புற கலையை சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை வைத்து படத்தில் ஆடல் பாடல் அட்டகாசமான தெருகூத்து,மாஸ் சண்டைக்காட்சிகள்  என கிராமத்து பாணியில் இப்படம் பட்டைய கிளப்பும் வகையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விவேகத்தில் விட்டதையும் சேர்த்து இதில் வெற்றியை தொடுவார்கள் என ரசிகர்கள் தீபாவளி வரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.