துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்த இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது அரவிந்தசமை, ஸ்ரேயா நடித்துள்ள ‘நரகாசுரன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்

இந்த நிலையில் அவருடைய அடுத்த படம் ‘நாடக மேடை’. இந்த படத்தை அவரே தயாரித்து இயக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் கெளதம் கார்த்திக், காளிதாஸ் ஜெயராம், பார்த்திபன் மற்றும் ரகுமான் என நான்கு ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர். அதேபோல் இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும், அவர்களது பெயர்கள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.