ஹரி இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள ‘சாமி 2’ இந்த வாரம்
செப்டம்பர் 21ஆம் தேதி வெளிவருகின்றன. மேலும், அதே
நாளில், ராஜா ரங்குஸ்கி, ஏகாந்தம், மேடை என நான்கு படங்கள்
வெளிவர உள்ளன.

கடந்த 2003-ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம்,
த்ரிஷா ஜோடியாக நடித்து வெளிவந்த படம் ‘சாமி’. இப்படம்,
வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து, ‘சாமி 2’ படத்தையும் ஹரி இயக்க, விக்ரம், கீர்த்தி
சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி
போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைத்துள்ளார்.

தரணிதரன் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன்
நடித்துள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’. இப்படத்திற்கு யுவன் ஷங்கர்
ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும், நடிகர் விவந்த், நீரஜா நடிப்பில் இயக்குநர் ஆர்சல்
ஆறுமுகம் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஏகாந்தம்’. இதைத்தவிர,
மேடை என நான்கு தமிழிப்படங்கள் இந்த வாரம்
வெளிவருகின்றன.