தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு உள்பட ஒருசில மொழிகளின் படங்களை வெளியிட்டு தியேட்டர் அதிபர்கள் காசு பார்த்து வந்தனர்.

ஆனால் வரும் 8ஆம் தேதி ஞாயிறு முதல் தமிழகத்தில் தெலுங்கு படங்களை ரிலீஸ் செய்ய போவதில்லை என்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ராம் சரண், சமந்தா நடித்துள்ள ‘ரங்கஸ்தலம்’ போன்ற படங்களும் ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு ஓடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலைநிறுத்தம் இன்னும் தீவிரம் அடைந்துள்ளதாகவும், இந்த பிரச்சனை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.