செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17

அனிதா மரணம்: நேரில் சென்று ஆறுதல் கூறிய ஜீ.வி.பிரகாஷ்

08:38 காலை

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் அனிதா. மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்தவருக்கு நீட் என்னும் வடிவில் வந்த எமன் அவரது உயிரை பறித்துவிட்டான். பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வால் தனக்கு மருத்துவ படிப்பு கனவு வீணாகிவிட்டதே என்ற விரக்தியில் இருந்தவர், அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து போராடினார். ஆனால், நீதிமன்றம் அவருக்கு கருணை வழங்க மறுத்துவிட்டது.

Loading...

முடிவு, இன்று அனிதா மனஉளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் இந்த தற்கொலை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அனிதாவின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நேற்று தனது கோபத்தை டுவிட்டரில் வெளிப்படுத்தியிருந்தார்.அதில் அனிதாவின் மரணம் அதிகாரமும்,சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று அரியலூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்க்கு நேரில் சென்று அவரது தந்தைக்கு ஆறுதல் கூறினார்.

(Visited 118 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com