தமன்னா படத்தில் ஜி.வி.பிரகாஷ்

கடந்த 2011ஆம் ஆண்டு நாகசைதன்யா, தமன்னா நடித்த ‘100% லவ்’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தமிழில் தயாரிக்கப்படவுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளராக மாற, பிரபல ஒளிப்பதிவாளர் சந்திரமெளலி இந்த படத்தை இயக்கவுள்ளார்.

நாகசைதன்யா கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பதோடு இந்த படத்திற்கு இசையும் அமைக்கின்றார். மேலும் தமன்னா கேரக்டரில் புதுமுக நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

படுஜாலியான ரொமான்ஸ் படமான இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.