முத்தின கத்திாிக்கா நாயகிக்கு அடித்த அதிா்ஷ்டம்!!

ஜி.வி.பிரகாஷ் காட்டில் மழை தான் போங்க! அவா் தொடா்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாா். ஜி.வி நடிப்பில் வெளிவந்த புருஸ்லீ படம் எதிா்பாா்த்த அளவு போகவில்லை என்றாலும் கைவசம் ஆறு ஏழு படங்கள் உள்ளது. இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுக ஆன இவா் தற்போது நடிகராக கலக்கி கொண்டிருக்கிறாா். தற்போது பாகா பாஸ்கா் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்க உள்ள இந்த படத்திற்கு குப்பத்து ராஜா என பெயாிடப்பட்டுள்ளது.

இப்படி ஜி.வி.பிரகாஷ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் , ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க உள்ள படமான நாச்சியாா் படத்தில் மாறுபட்ட கதைபாத்திரத்தில் நடித்து வருகிறாா்.  கல்யாணமாகி சினிமாவிலிருந்து விலகி இருந்த ஜோதிகாவுடன் நடிக்கும் அதிா்ஷ்டம் கிடைத்துள்ளது ஜி.வி.பிரகாஷ்சுக்கு. இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநா் பாலா இயக்கத்தில் இரண்டும் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகின்றனா். அதோடு மட்டுமல்ல ஜி.வி.பிராகாஷ் ராஜீவ் மேனனின் சா்வம் தாள மயம், இயக்குநா் சசி இயக்கத்தில் நடிகா் சித்தாா்த் உடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்க உள்ளாா. தொடா்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

ஜி.வி.பிரகாஷ் காட்டில் அடை மழை பெய்து வருகிறது. இப்படி பல ஹீரோயின்களுடன் நடிக்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும். அந்த வாிசையில் முத்தின கத்திாிக்கா படத்தின் நாயகியான பூனம் பாஜ்வாவுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாா்.  ரஜினி நடிப்பில் 1979ம் ஆண்டு வெளியான குப்பத்து ராஜா படத்தின் தலைப்பை இப்படக்குழு கைப்பற்றி இருக்கிறது.  இந்த படத்தை நடன இயக்குநா் பாபா பாஸ்கா்   இயக்க உள்ளாா். இதில் முக்கிய தோற்றத்தில் நடிகா் பாா்த்திபன் நடிக்க உள்ளாா். முந்தின கத்திாிக்கா படத்திற்கு பிறகு படம் எதில் ஒப்பந்தமாகாமல் இந்து பூனம் பாஜ்வா  இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளாா். ,e;j மற்ற நடிகா் நடிகைகள் தோ்வு தீவிராமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.