விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஜி.வி.பிரகாஷ்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்திற்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் ,சமீபத்தில் விஜய்யின் அறிமுகப்பாடல் ஒன்றை ரிகார்டிங் செய்தார். அதிகபட்ச எனர்ஜியுடன் இருக்கும் இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெண்டில்மேன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ் தற்போது மீண்டும் அவரது கம்போஸிங்கில் அமைந்த பாடலை பாடியுள்ளார். இந்த குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டரில் கூறியபோது, ”’மெர்சல்’ படத்தில் ஒரு எனர்ஜெடிக்கான பாடலை பாடியுள்ளேன். என்னுடைய ஃபேவரைட் இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் விஜய் அண்ணா அவர்களின் படத்தில் பாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்று கூறியுள்ளார்

மேலும் இந்த படத்தில் விஜய்யும் வழக்கம்போல் ஒரு பாடலை பாடவுள்ளதாகவும், அந்த பாடல் விரைவில் ஒலிப்பதிவு செய்யப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாயத்து தலைவர், டாக்டர் மற்றும் மேஜிக்மேன் ஆகிய 3 தோற்றங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யாமேனன் காஜல் அகர்வால், சமந்தா, என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில்  எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தை தேனாண்டாள் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கின்றது.