சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காணவரும் ரசிகர்கள் கீழ்க்கண்ட பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று சேப்பாக்கம் மைதான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கொடிகள், பேனர்கள், கமர்ஷியல் லோகோ அடங்கிய போஸ்டர்கள், கைப்பைகள், மொபைல் போன்கள், சூட்கேஸ்கள், பேஜர்கள், ரேடியோ, டிஜிட்டல் டைரி, லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்ரிக்கார்டர், பைனாகுலர், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பொருட்கள், ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி, வீடியோ கேமிராக்கள், பட்டாசு, எளிதில் தீப்பற்றும் பொருட்கள், வாட்டர் ஜக், வாட்டர் பாட்டில் ,சிகரெட், பீடி, தீப்பெட்டி, லைட்டர், ரேசர், கத்தரிக்கோல், கண்ணாடி, கத்தி, பேட்டரி, உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள்

இந்த போட்டியை நேரில் பார்க்க செல்வதும் திகார் சிறையில் இருந்து போட்டியை பார்ப்பதும் ஒன்று என்றும், மானமுள்ள எவனும் இந்த போட்டியை பார்க்க மைதானத்திற்கு செல்ல மாட்டார்கள் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில், ‘அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?? தடையை தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..?’ என்று பதிவு செய்திருக்கிறார்.