ஆர்யா நடிப்பில் ‘ஹரஹர மகாதேவி இயக்குனர் சந்தோஷ் இயக்கவுள்ள கஜினிகாந்த் என்ற திரைப்படம் உருவாகவுள்ளது என்பது குறித்த தகவல் சமீபத்தில் வெளிவந்தது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ள நிலையில் வரும் 11ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது.

டிசம்பர் 11ஆம் தேதி ஆர்யாவின் பிறந்த நாள் என்பதும் மறுநாள் ரஜினிகாந்த் பிறந்த என்பதும் குறிப்பிடத்தக்க நிலையில் இருவருக்கும் பொதுவான நேரத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது