ஆம் ஆத்மி வேட்பாளர் ஆதிஷியைக் கீழ்த்தரமாக விமர்சித்து பாஜக வேட்பாளர் கம்பீர் நோட்டிஸ் வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். அவருக்கு டெல்லி கிழக்கு தொகுதியில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பாக ஆதிஷி களமிறக்கப்பட்டுள்ளார். இருவரும் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அத்தொகுதியில் ஆதிஷியை ஆதரித்து சிலர் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டுள்ளனர். அதில் ஆதிஷி மாட்டுக்கறி தின்பவர் என்றும் பாலியல் தொழிலாளி என்றும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இந்த துண்டுப் பிரசுரங்களை கம்பீர்தான் வெளியிட்டுள்ளார் என ஆதிஷி குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலும் கம்பீருக்குக் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை கம்பீர் மறுத்துள்ளார். ’நான்தான் இந்த செயலில் ஈடுபட்டேன் என்பதை நிரூபித்தால், போட்டியிலிருந்து விலகுகிறேன்.  அப்படி நிரூபிக்காவிட்டால் நீங்கள் இருவரும் அரசியலிலிருது விலகி விடுகிறீர்களா ?’ என சவால் விட்டுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கும் தொடர இருக்கிறார்.