முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அப்ரிடிக்கும் கம்பீருக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் உருவாகியுள்ளது.

அதிரடிக்கும் சர்ச்சைக்கும் பெயர் போனவருமான பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அப்ரிடி தனது வாழ்க்கை வரலாற்றை ’கேம் சேஞ்சர்’ எனும் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தால் இப்போது பல சர்ச்சைகள் வெடித்துள்ளன. முன்னதாக தனது உண்மையான வயது என்ன என்பது குறித்து வெளிப்படையாகப் பேசியதால் வெடித்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  பாலாஜியை கேவலமாக பேசும் மகத்! அதிர்ச்சியில் பிக்பாஸ்வீடு

2007 ஆம் ஆண்டு அஃப்ரிடிக்கும் கம்பீருக்கும் களத்தில் நடந்த வாக்குவாதத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். களத்தில் இருவரும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொன்டனர். தனது புத்தகத்தில் இந்த சண்டைப் பற்றி குறிப்பிட்டுள்ள் அஃப்ரிடி ‘கம்பீருக்கும் எனக்கும் நடந்த மோதலைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் காட்டும் ஆட்டிடியூட் அளவுக்கு ரெக்கார்டு இல்லாதவர். டான் பிராட்மேன் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரைப் போன்று நடந்துகொள்வார். எங்கள் ஊரில் இவர் போன்றவர்களை சரியல் (சிடுமூஞ்சிக்காரன்) என அழைப்போம். ’ என ஒரு அத்தியாத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  பாசிச பாஜக ஒழிக; தமிழிசை வாக்குவாதம்: மாணவி சோஃபியா கைது!

இந்த தகவல் வெளியானதும் இந்திய அணியின் ரசிகர்கள் அஃப்ரிடியை விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் இதுகுறித்து கம்பீரே தனது கருத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்தியா இன்னும் பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ சுற்றுலாவுக்காக விசா கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் இந்தியா வந்தால் உங்களை நானேத் தனிப்பட்ட முறையில் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.