Rowdy murder – மதுரையில் பிரபல ரவுடி ஒருவரின் தலையை வெட்டி மர்ம கும்பல் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தர் என்கிற சௌந்திரபாண்டியன். இவர் மீது 15க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. எனவே, இவரை தேடப்படும் குற்றவாளியாக மதுரை போலீஸ் அறிவித்துள்ளது. எனவே, சௌந்தர் பல இடங்களில் மாறி மாறி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  மாமியாரை நடுரோட்டில் இழுத்துப்போட்டு வெட்டிய மருமகன்

சமீபத்தில் முத்துப்பட்டி பகுதியில் உள்ள அவரின் அத்தை வீட்டிற்கு சென்று தங்கினார். நேற்று இரவு அந்த வீட்டின் மாடியில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரின் அறைக்குள் நுழைந்து உள்பக்கம் தாழிட்டது. அதன்பின் சௌந்தரின் தலையை மட்டும் வெட்டி எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியது.

இதையும் படிங்க பாஸ்-  பெண்ணை காரில் தரதரவென இழுத்து சென்ற கும்பல் - இறுதியில் நேர்ந்த சோகம்

மேலிருந்து 4 பேர் ஓடுவதை கண்ட பொதுமக்கள் சௌந்தரின் அறையில் சென்று பார்த்த போது அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து சௌந்தரின் உடலை கைப்பற்றினர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகப்பட்ட போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு இடத்தில் சௌந்தரின் தலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சௌந்தரை குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.