கமல்ஹாசன் நடித்த ‘தேவர் மகன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றபோதிலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை போற்றும் வகையில் அந்த படம் இருந்ததாக ஒருசிலர் விமர்சித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு ‘தேவர்’ பட டைட்டிலில் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளார். இவர் அதே சமூகத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் முத்தையா இயக்கவுள்ள அடுத்த படத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் டைட்டில் தான்’தேவர் ஆட்டம். இந்த படத்தின் டைட்டிலில் ஜாதி இருந்தாலும் இதுவொரு பொழுதுபோக்கு படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.