Gautham Karthik

இளம் ஹீரோக்களில் வேகமாக வளர்ந்து வருபவர் கௌதம் கார்த்திக். ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இந்த நிலையில் இவர் நடித்த அடல்ட் படமான ஹரஹர மகாதேவி நல்ல வெற்றி பெற்றது. தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வசூல் பெற்றாலும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதையும் படிங்க பாஸ்-  தேவராட்டம் படத்தின் சில காட்சிகள் - ஸ்னீக் பீக் வீடியோ

இந்த நிலையில் அடல்ட் படம் என்றாலே கௌதம் கார்த்திக் தான் என ஒரு முத்திரை விழுந்தது. ஆனால் அந்த முத்திரையை மிஸ்டர் சந்திரமௌலி படம் நீக்கியுள்ளது. படத்தில் சண்டை காட்சி்கள், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் அசத்தியுள்ளார் கௌதம். படமும் ஓரளவிற்கு வசூலும் பெற்று வருகிறது.