கோலி சோடா 2 – கௌதம் மேனன், என்ன கனெக்ஷன்?

விஜய் மில்டன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கோலி சோடா’ திரைப்படும் பெரிதும் வரவேற்கபட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘கோலி சோடா 2’ என்ற பெயரில் வர இருக்கிறது நமக்கு தெரியும். இப்போ புதுசு என்னென்னா இதுல கௌதம் மேனனும் பங்களிசிருக்காரு என்பதுதான்.இந்தப் படத்தின் டீசரை கௌதம் மேனன் குரலில் வெளியிட இருக்காரு விஜய் மில்டன். அதோட ஒலிப்பதிவ சமீபத்திலதான முடிஞ்சிருக்கு.

இதைப் பற்றி விஜய் மில்டன் கூறுகையில், “படத்தின் சாராம்சம், பின்னணி குரலோட டீசரில் சொல்லப்படும். ஒரு குறிப்பிட்ட கோவ உணர்வை இந்தப் படம் வெளிக்காட்டும், எனது படத்தில் நான் தெரிவிக்க விரும்பும் கருத்தை கெளதம் மேனனின் குரல் சரியாகப் பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறது இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்திருக்குனு சொல்லாம்.