வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் ‘வடசென்னை’. இப்படமானது கடந்த அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வந்தது. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன் வெளியிட்டது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் மூன்று பாகமாக உருவாக உள்ள நிலையில், முதல் பாகமான ‘வடசென்னை’ உலகம் முழுவதும் ரிலீசானது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை பார்த்து திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டரில், “வெற்றிமாறனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம், அற்புதமான இயக்கம், காட்சியமைப்பு, எழுத்து – இயக்கம் என வெற்றிமாறனின் பெயர் வரும்போது திரையரங்கில் ரசிகர்கள் கைதட்டும் சத்தத்தைக் கேட்பதைவிட சிறந்த உணர்வு இல்லை. தனுஷீக்கு எளிதாக வரும் ஒன்றில் அற்புதமாகச் செயல்படும்போது, அவரைத் தாண்டி எங்கும் பார்க்க முடியவில்லை.

துணிச்சலாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வசீகரமாக ஆண்ட்ரியா உயர்ந்து நிற்கிறார். வசவுச் சொற்கள் பேசும் இளம் பெண் கதாபாத்திரத்தில் எல்லோரையும் கவர்ந்திழுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கடிந்து பேசும் ஆண்களிடம், தன் மனதில் இருப்பதை பேசும் ஒரு பெண்ணைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது” என இயக்குநர் கௌதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.