செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 12

கௌதம் மேனனுடன் மீண்டும் இணையும் சிம்பு – டிவிட்டரில் தகவல்

07:48 காலை

சிம்பு அடுத்து நடிக்க உள்ள ஆங்கில படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் வசனம் எழுத இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

Loading...

சிம்புவை வைத்து இயக்குனர் கௌதம் மேனன் விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடைமையடா என இரண்டு படங்கள் இயக்கினார். இரண்டுமே வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தார். அப்படம் அவருக்கு தோல்லிப் படமாக அமைந்தது.

இந்நிலையில் சிம்பு அடுத்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் வசனங்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இடம் பெறுகிறது. எனவே, இது ஆங்கிலப்படமா அல்லது தமிழ் படமா என்ற குழப்பம் அவரின் ரசிகர்களிடையே எழுந்தது.

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சிம்பு “ என்னுடைய அடுத்த படம் இரண்டு மொழிகளில் உருவாகிறது என்பது தவறான செய்தியாகும். அப்படம் ஆங்கிலத்தில் மட்டுமே எடுக்கப்படுகிறது. அந்த வசனங்களை இயக்குனர் கௌதம்மேனன் எழுதுகிறார். மேலும், அப்படம் தமிழ் மற்றும் மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படவுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற சந்தேஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com