வெளியேறியவுடன் பிக்பாஸ் விதிமுறையை மீறிய காயத்ரி

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற்றும் படலம். கடந்த வாரம் ரைசா மற்றும் காயத்ரி ஆகியோர்  நாமினேட் செய்யப்பட்டார்கள். பொதுமக்களை பொறுத்தவரை ரைசாவை விட காயத்ரி மேல் அதிக கோபமாக இருந்தனர். ஆனால் காஜல் வரவுக்கு பின் பலர் காயத்ரி உள்ளே இருக்க வேண்டும் என விரும்பினர். காரணம் காஜல் 10 காயத்ரிக்கு சமம.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி வெளியேறியது உறுதியானது. இன்று அந்த நிகழ்ச்சி ஓளிபரப்புவதற்கு முன்பே அதனை காயத்ரியே காட்டிக் கொடுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றைய புரமோ நிகழ்ச்சியை டுவிட் செய்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலர் அவரது டுவிட்டருக்கு கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்துள்ளனர்.  இதனால்  சில மணி நேரங்களில் தான் ரீ-ட்வீட் செய்ததை நீக்கிவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காகப் போடப்பட்ட ஒப்பந்தபடி, பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் முடியும் வரை அந்நிகழ்ச்சி பற்றிய எந்த கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்பது விதி. ஆனால் காயத்ரி வெளியேறியது இன்னும் தொலைக்காட்சி ஒளிபரப்பாதபோது டுவிட்டர் மூலம் அதனை உறுதி செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.