கமல் எப்படி அந்த கேள்வியை கேட்கலாம்? கடுப்பான காயத்ரி

12:45 மணி

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் திட்டு வாங்காத ஒரே நபர் வையாபுரி மட்டுமே. இதுவரை அமைதியாக, ஒருசிலரை கண்டுகொள்ளாமல் இருந்த கமல், நேற்று விஸ்வரூபம் எடுத்துவிட்டார். ஒரே பந்தில் எட்டு விக்கெட்டுக்கள் போல ஓவியா வெளியேறியதன் காரணத்தை கேட்டு அனைவரையும் அவர்கள் வாயாலேயே தங்கள் தவறை ஒப்புக்கொள்ள செய்துவிட்டார்.

இந்த நிலையில் காயத்ரியை மட்டும் கொஞ்சம் அதிகமாக கண்டித்தார் என்று சொல்லலாம். குறிப்பாக ஹேர் என்ற வார்த்தைய பயன்படுத்தியது குறித்து கமல் கேட்ட கேள்விக்கு காயத்ரி கூறிய பதில் அதிர்ச்சிக்குள்ளானது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய புரமோ வீடியோவில் காயத்ரி கூறியதாவது: மூணு வாரமா நீ கெட்ட வார்த்தை பேசற, கெட்ட வார்த்தை பேசுற என்று கமல் கூறும் இமேஜ் எனக்கு தேவையில்லை. கமல் கேட்கும் கேள்விகள் எல்லாம் எனக்கு டிஸ்கரேஜிங்கா இருக்குது’ ‘நீ ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறாய் என்று கேட்க எங்க அம்மாவுக்கு மட்டுமே உரிமை உண்டு. கமல் யார் அதை கேட்க? என்று கூறினார். இதற்கும் அடுத்த வாரம் அவர் கமலுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும்.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393