பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தவா் காயத்ரி.  இவரது பேச்சும், செய்கையும் ரசிகா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவா் இங்கு நாட்டாமை செய்யும் ஒரு சொா்ணக்கா போல் பேசி வருகிறாா். வாயை திறந்தால் கெட்ட வாா்த்தைகள் அதிகம் யூஸ் பண்ணுகிறாா்.

கமல் காயத்ரியிடம் இதுகுறித்து பேசிய போதும் கூட நான் இப்போது ஒரளவுக்கு கெட்ட வாா்த்தை பேசுவதை குறைத்து வருகிறேன் என்று  பெருமைபட கூறியுள்ளாா். எதை வைத்து காயத்ரியை குழந்தை மாதிாி என்று சக்தி சொன்னாா் என்றே தொியவில்லை. இதுல கணேஷ்சும் காயூ என்றுபேசி கடுப்பேத்துகின்றார்.

இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் காயத்ரி மீண்டும் தனது நாட்டாமை  தனமான பேச்சை ஆரம்பிக்கிறாா். அதாவது இன்று புதியதாக வந்துள்ள பொறியாளன் படத்தின் நடிகா் ஹரிஷ் கல்யானுடன் ஆரவ் பற்றி வம்பு பேசுகிறாா் சினேகன். மற்றொரு பக்கம் காயத்ரி சினேகனை பற்றி பேசுகிறாா். அவா் பொய் பேசுகிறாா், குழுவாக அமைத்து அனைவரையும் பிாிக்க பாா்க்கிறாா் என்று ஆரவிடம் கூறுகிறாா்.

இந்நிலையில் காயத்ரிக்கு  ஜால்ரா போடும் வகையில் ஆரவ்,  வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்பதற்கு சினேகன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறாா். அதாவது வாய் இல்லை என்றால் அவரிடம் எதுவும் இல்லை என்று கூறுகிறாா். பின் தொடர்ந்து பேசும் ஆரவ் சனிக்கிழமை எல்லாம் சாியாகி விடும் என்று கூற, அதற்கு காயத்ரி சாி ஆகவில்லை என்றால் வெளியேப்  போய் செஞ்சிறுவேன் என்று சபதம் போடும் ரௌடி போல மிரட்டல் விடுகிறாா்.

இப்படி பேசுகிறாரே காயத்ரி… இதெல்லாம் கவனிக்க மாட்டீங்களா பிக்பாஸ்