பிரபல நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகா்களின் கோபத்திற்கு ஆளானார். தற்போது கமலின் அரசியல் பிரவேசம் பற்றி ட்விட்டா் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தனது தந்தை கமல்ஹாசன் அரசியலில் இறங்குவார் என்று முன்பே கூறினார் என காயத்ரி ரகுமான் தெரிவித்துள்ளார்.

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டான்ஸ் மாஸ்டா் காயத்ரி ரகுமாம், கமலிடம் வாரந்தோறும் ஏதாவது ஒரு காரணத்திற்காக திட்டு வாங்குவதும், கமலின் கோபத்திற்கு ஆளாகுவதும் வாடிக்கையாக நடந்து வந்தது. கமல் உங்களுடைய கெட்ட வார்த்தை பேசும் செயல்களை திருத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி பின் தனது ட்விட்டா் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டி வருகிறார். அப்படி தனது ட்விட்டா் வலைத்தளத்தில் கமலின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். எனது தந்தை கமல்ஹாசன பற்றி எப்போது பேசினாலும் பெருமையாக பேசுவார். பிற்காலத்தில் கமல் சார் அரசியலுக்கு வருவார் என கூறினார். சிறந்த அரசியல்வாதியாகவும் விளங்குவார் எனவும் என் சிறு வயதிலிருந்தே என் தந்தை கூறி வந்தார். அது இப்பொழுது நடந்து வருகிறது. தற்போது அவருக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. அவருக்காக பிராத்திப்போம் என டுவிட் செய்துள்ளார்.

இதற்கு பதிலடியாக ஒருவா், அவருக்காக நீங்கள் பிரார்த்தனை செய்வது இருக்கட்டும். அவருக்கு ஆதரவு தெரிவித்து அவருடைய கட்சியில் இணைய வேண்டும். உண்மையிலேயே நீங்கள் கூறியது உண்மையெனில் அவருக்காக நீங்களும் கட்சியில் இணையுங்கள் என ட்விட் செய்துள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக காயத்ரி, ஒருவரை நாம் ரொம்பவும் கண்முடித்தனமாக பின்பற்றித்தான ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை. அவா் எல்லாவற்றிலும் இருந்து மாறுப்பட்டு வித்தியாசமாக செயல்படவேண்டும். மற்ற அரசியல் கட்சிகளை விட பலமாக இருக்க வேண்டும். இப்போதுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அந்த செயல்கள் எல்லாம் அவ்வளவு எளிதானது அல்ல. அதுபற்றி எனக்கு நன்றாக தெரியும் என பதிலளித்துள்ளார்.