சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை ஓவியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம், ஓவியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

ஓவியாவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உனக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீ எப்படி பிரபலமடைந்தாயோ அதே போல் திரைப்படங்களின் மூலமும் நீ பிரபலமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு நீ அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. நான் இதை ஒரு தோழியாகமின்றி ஒரு சகோதரியாகவும் கூறுகின்றேன். நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன். இதை நான் விளையாட்டிற்காக கூறவில்லை. எனது இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் இவை. உனக்கு கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு’ என்று கூறியுள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த வாழ்த்துக்கள் ஓவியா ஆர்மியினர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது

ஓவியாவுக்கு வாழ்த்து கூறிய காயத்ரி ரகுராமின் வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது.