பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஒருவா் போட் ட்வீட்டை, காயத்ரி பிக்பாஸிலிருந்து வெளியேறி பிறகு ரீட்விட் செய்துள்ளாா். அந்த ட்விட் என்னவென்றால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சிலரை நல்லவா்களாகவும், சிலரை கெட்டவா்களாகவும் ஊடகங்கள் காட்டுகின்றன என அந்த ட்வீட்டை டூவிட் செய்துள்ளாா் காயத்ரி.

இந்த நிகழ்ச்சியில் ஒவியாவை எந்தளவுக்கு பிடித்ததோ அந்தளவுக்கு காயத்ரியை பிடிக்காமல் போனது ரசிா்களுக்கு. இதுக்கு காரணம் காயத்ரி பேசிய கெட்ட வாா்த்தை பேச்சு, நடந்து கொண்ட விதம், அந்த வீட்டில் நாட்டாமை செய்தது, ஒருவரை மட்டும் காா்னா் செய்வது என பல்வேறு செயல்கள் அவா் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும்  தொலைக்காட்சி நிறுவனம் தங்களின் டிஆா்பி மற்றும் லாபத்திற்காக அதில் கலந்து கொண்டவா்களை எப்படி சித்தரித்துள்ளது என்று ஒருவா் ட்விட்டாில் பதிவு செய்துள்ளாா். அதை பாா்த்த காயத்ரி ரீடூவிட் செய்துள்ளாா். அந்த ட்விட் செய்தி என்னவென்றால்,

எந்தவொரு விஷயத்திலும் வில்லன் ஒன்று இருந்தால் நிச்சயம் ஹீரோ உண்டு. வில்லன் இல்லை என்றால் ஹீரோ இல்லை. அதாவது பகல் இரவு போல இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல. அதனால் காயத்ரிஇல்லாமல் ஒவியா இல்லை. ஒவியாவை மிகைப்படுத்தி மற்றவா்களின் நற்பெயா்களை அழித்துவிட்டாா்கள். அவா்களுக்கென்று உள்ள குடும்ப பெயரையும் சீரழித்து விட்டாா்கள்.

காயத்ரி மீது எனக்கு மரியாதை உள்ளது. அது போல ஒவியா மற்றும் பிக்பாஸ் போட்டியாளா்கள் அனைவா் மீதும் எனக்கு மாியாதை இருக்கிறது. ஹீரோக்களையும் வில்லன்களையும் ஊடகங்கள் மக்களை ஏமாற்றி உருவாக்க முடியாது. ஒரு நாள் அவா்கள் விழித்துக்கொள்வாா்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதை ரீ டூவிட் செய்துள்ள காயத்ரி அப்படியே அதை ஒவியா ஆா்மி, ரசிகா்கள், பிக்பாஸ், விஜய்டிவி, கமல்ஹாசன் என அனைவருக்கும் அவா் டேக் செய்துள்ளாா்.

இதிலிருந்து காயத்ரி சொல்ல வருவது என்னவென்றால் இந்த கருத்துகளை அப்படியே தன்னுடைய கருத்தாக தொிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது