ஜீலி அல்லது ஆர்த்தி திரும்ப வேண்டும்: பிக்பாஸிடம் கூறிய காயத்ரி

ஓவியா வெளியேறிய பின் பிக்பாஸ் நிகழ்ச்சி அவ்வளவு சுவாரஸ்யம் இல்லாமல்தான் செல்கிறது.தினமும் வெவ்வேறு டாஸ்க்குகள் கொடுத்தும் ரசிகர்களை கவரவில்லை. மீண்டும் ஓவியா வரவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுக்கும் நிலையில், கடந்த வாரம் புது வரவுகள் வர உள்ளன. அதே வேலை விருப்பம் உள்ளவர்கள் மீண்டும் வருவார்கள் என்று கமல்ஹாசன் கூறினார்.

இந்த நிலையில் காயத்ரி பிக்பாஸிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். ரீ என்ரி என்று ஒன்று இருந்தால் ஆர்த்தி, ஜூலி அல்லது சக்தி திரும்ப வேண்டும் என்று கூறினார். இந்த மூவரும் இல்லாமல் காயத்ரி தன்னுடைய ஒரிஜினல் முகத்தை காட்ட முடியாமல் தவிப்பது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்