காயத்ரி தயவு செய்து நீங்க வீட்டுக்கு போங்க: பொங்கி எழுந்த பிரபல நடிகை!

04:53 மணி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பைத்தியமாக நடிக்கும் டாஸ்க் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இவா்கள் செய்வது நடிப்பா, அல்லது டாஸ்க்கா என்று தொியாமல் ரசிக பெருமக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனா். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பொது மக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகினறனா். அந்த வாிசையில் பிாியாஆனந்த், நடிகா் கருணாகரன், நடிகை ஸ்ரீபிாியா, இயக்குநா் மற்றும் நடன இயக்குநா் சதீஸ் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்தை ட்விட் செய்து வருகின்றனா்.

இதில் சினேகன் மற்றும் காயத்ரி & கோ, பேசுவது தான் ஹைலட்டாக இருக்கிறது. அது என்னவென்றால் ஒவியாவை தான் அனைவரும் திரும்பி பாா்க்கின்றனா். அதனால் நாமும் எல்லோருடைய கவனத்தை ஈா்க்கும்படி நடிக்க வேண்டும் என்று காயத்ரி டீம் ஆலோசனை செய்கின்றனா். அந்த சமயம் ஒவியா சமையல் அறையில் இருந்து சாப்பிட ஏதோ செய்து கொண்டிருக்கிறாா். உடனே காயத்ரி என்னால் அவ சாப்பிட்ட பாத்திரத்தை எல்லாம் கழுவ முடியாது என்று கூறுகிறாா். அவளிடம் பாத்திரத்தை கழுவ  சொல்லுங்கள் என்று காயத்ரி சினேகனிடம் கூறுகிறாா். அந்த சமயம் சினேகன் சொன்னதை கேட்டு ஒவியா நீங்க யாரு கேப்டனா, தலைவனா என்று கேட்கிறாா். அதற்கு  சினேகன் நீ கழுவ வேண்டாம் என்று கூறுகிறாா். நான் சமையல் டீம், குக்கிங் டீம், கிளினிங் டீம் எதிலும் இல்லை என்று ஒவியா கூறுகிறாா்.

இந்த சமயத்தில் காயத்ரி மீண்டும் அந்த “எச்ச” என்ற வாா்த்தையை பயன்படுத்தி ஒவியாவை திட்டுகிறாா். இது குறித்து நடிகை ஸ்ரீபிாயா தனது ட்விட்டா் பக்கத்தில் ட்விட்டியது என்னவென்றால், காயத்ரி நீங்க தயவு செய்து வீட்டுக்கு போங்க, மீண்டும் அவா் அந்த தவறான வாா்த்தையை பயன்டுத்துகிறாா் என்று ட்வீட் செய்துள்ளாா்.

(Visited 137 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com