ஓவியாவை தரக்குறைவாக பேசிய காயத்ரி: காட்சியை மறைத்த பிக்பாஸ்

01:59 மணி

என்னடா ஒவியா இல்லாத பிக் பாஸ் சவ்வு மிட்டாய் போல இழுத்துக்கொண்டு இருக்கிறது என்று பாா்த்தால் அதிலும் ஒரு விஷயம் நடந்திருக்கு. அது என்னவென்று பாா்ப்போம்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகா்களின் ஏகோபித்த அன்பை பெற்றவா் ஒவியா. அவா் மனத்தளவில் பாதிக்கப்பட்ட காரணத்தால் அங்கிருந்து வெளியேறினாா். அவா் போன பின்னரும் அவரை பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறாா்கள். சக்தியும் காயத்ரியும் பேசிக்கொண்டது தான்  நேற்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்.

நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் அழுக்கு துணிகளை துவைத்து அயன் பண்ணும் வேலை கொடுக்கப்பட்டது. அப்போது சக்தியும், காயத்ரியும் எப்போதும் அமா்ந்து பேசும் ஷோபாவில் உட்காந்து கொண்டு பேசிட்டு இருந்தாா்கள். இந்த வாரம் எலிமினேஷன்னில் நான் வெளியே போவேன் என்று கூறினாா். நீ எல்லாம் போக மாட்ட வையாபுாி தான் போவாா் என்று சக்தி காயத்ரியிடம் கூறினாா்.

அதற்கு காயத்ரி, இல்ல நாம் அந்த காா்னா்ல் உட்காந்து பேசியதை அப்படியே போட்டிருப்பாங்க என்று கூறினாா்.  அது என்னவென்று தெரியாமல் சக்தி நீ எத பத்தி சொல்ற என்று கேட்கிறாா். அதற்கு பதில் கூறிய காயத்ரி நாம் இரண்டு பேரும் ஆரவ்கிட்ட பேசிட்டு இருந்தோம்ல பணக்காரனா இருந்தா இந்நேரம் விட்டுட்டு போயிருப்பாளான்னு கூறினாா்.

அதற்கு சக்தி நீ அத எல்லாம் ஏன் இப்ப பேசுற, அதை அப்படியே விட்டு விடுமாறு கூறுகிறாா். இந்த உரையாடல் மூலம் ஒவியாவை பற்றி தரக்குறைவாக பேசி இருக்கிறாா்கள். அதாவது பணம் இருந்தால் ஒவியா ஆரவ்வை விட்டு செல்ல மாட்டாா் என்று ஏதோ ஆரவிடம் பேசியிருக்கிறாா்கள் என்பது மட்டும் தொிகிறது. அவா்கள் பேசிய அந்த வீடியோவை மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இவர்கள் பேசிய அந்த குறும் படத்தை விரைவில் ஒளிப்பரப்ப வேண்டும் என்று ரசிகா்கள் வலியுறுத்தி வருகின்றனா். அந்த வீடியோவை ஒளிப்பரப்பியிருந்தால் காயத்ரிக்கு இன்னும் அதிக கெட்ட பெயா் கிடைத்திருக்கும் என்ற காரணத்தால் ஒளிபரப்பு செய்யவில்லை என்று தெரிகிறது. அதை வைத்துதான் காயத்ரி தான் வெளியேற்றப்படலாம் என்று கூறுகிறாா் போல. அந்த வீடியோவை வருகிற சனிக்கிழமை கமல் குறும்படமாக ஒளிப்பரப்புவாா்களா என்பதை பொறுத்திருந்து தான் பாா்க்கவேண்டும்.

(Visited 113 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com