சின்னத்திரையில் தற்போது பரபரப்பாக ஓடிகொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் பிந்துமாதவி புதிய வரவாக பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்தது முதல் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ஓவியாவும் ஆரவும் நல்ல நட்புடன் இருந்தார்கள். இது மற்ற போட்டியாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் ஓவியாவை எலிமினேசன் செய்ய பரிந்துரை செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம் ஓவியாவும் ஆரவை நாமினேட் செய்தார். கடந்த வாரங்களாக நல்ல நட்புடன் இருந்த இவர்களுக்குள் என்ன பிரச்சனை என ரசிகர்கள் குழம்பினர்.

ஆரவின் இந்த மாற்றத்திற்கு காயத்ரிதான் காரணம் என தெரிகிறது. ஓவியா.. ஓவியானு உன்னோட வாழ்க்கையை விட்டுவிடாதே. அவள் உன் தோள் மேல சாய்ந்து கொண்டு சிம்பதி கிரியேட் பன்ன பார்க்கிறாள் என காயத்ரி சொன்ன வார்த்தைக்ளே ஆரவின் மாற்றத்திற்கு காரணம் என தெரிகிறது.

காயத்ரியின் வில்லத்தனம் இன்னும் என்ன மாற்றங்களையெல்லாம் கொண்டுவரபோகிறதோ?