பழம் பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் அண்மையில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றது. அதில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷூன் நடிப்பை பாரத்து அனைவரும் வியந்து பாராட்டி வருகிறார்கள். சினிமா பிரபலங்களான பாகுபலி இயக்குனர் ராஜமௌலி, கமல் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சாவித்திரி படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையில் சென்னைக்கு வந்து முதலில் நடனம் ஆடி பின் படத்தில் நடித்து, அதன் பின் ஜெமினி கணேசன் நட்பு, அவர் கற்று கொடுக்கும் தமிழ், பின் காதல், அவரை திருமணம் செய்து கொண்டு மணவாழ்க்கை முறிவு, படம் தயாரித்து நஷ்டம் அடைதல், சொத்துக்களை இழப்பது என படம் பயணிக்கிறது. இந்த படத்தில் சாவித்திரிக்கு ஜெமினி தான் குடிக்க கற்று கொடுப்பது போல காட்டப்பட்டுள்ளது. இதற்கு ஜெமினி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாவித்திரிக்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால் ஜெமினிக்கு ஈகோ பிரச்சனை ஏற்பட்டு குடிக்க தொடங்குவது, அதை கண்டிக்கும் சாவித்திரி, பின் அவரையும் குடிக்க சொல்வது, அதனால் சாவித்திரி போதைக்கு அடிமையாகி பாட்டில் பாட்டிலாக குடித்து சர்க்கரை நோய் ஏற்பட்டு கோமாவில் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

சாவித்திரி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தபோதே ஜெமினியும் பிஸியாக தான் நடித்து கொண்டிருந்தார் என்று அவரது முதல் மனைவி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனார்கள். இந்த படத்தில் ஜெமினி கணேசனை கெட்டவராக சித்தரித்து உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். ஜெமினியின் மகள் கமலா செல்வராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்பா சாவித்திரக்கு மது குடிக்க கற்றுக்கொடுப்பது போல காட்சி இருப்பதை பாரத்து அதிர்ச்சியடைந்து விட்டேன். தன்னை விரும்பிய பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார். பிராப்தம் படம் எடுக்க சாவித்திரி முயன்ற போது அவருக்கு உதவி செய்யும் பொருட்டு சாவித்திரியை காண சென்ற போது அவரை துரத்தி அனுப்பி விட்டார் சாவித்திர் என ஜெமினி குடும்பத்தினர் கூறியுள்ளனர்.