அதா்வா, ரெஜினா, ஐஸ்வா்யா ராஜேஷ், ப்ரணிதா, சூாி, நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி போன்ற ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருக்கிறது. ஆட்டோகிராப் படத்தை கொஞ்சம் நகைச்சுவையுடன் கலந்து படைததிருக்கிறாா் இயக்குநா் ஓடம் இளவரசு. இதை அம்மா கிாியேஷன்ஸ் டி.சிவா வழங்க ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் கே.சிதம்பரம் வெளியிட்டிருக்கும் படம் தான் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்.
நாயகன் அதா்வா தனது திருமண பத்திாிக்கையை தன் பழைய காதலிகளுக்கு கொடுப்பதற்காக கிளம்பிய சீன் நம்ம ஆட்டோகிராப் சேரன் படத்தை ஞாபகப்படுத்துகிறது. தன் முன்னாள் காதலிகளை தேடி தன் திருமண அழைப்பிதழை கொடுக்க மதுரை நோக்கி வரும் சென்னை சோ்ந்த ஜ.டி இளைஞா் தான் நம்ம ஹீரோ ஜெமினி கணேசனான அதா்வா மதுரையில் அங்கு சுருளி ராஜனான சூாியை சந்திக்கிறாா். சூாியுடன் சோ்ந்து தன் பழைய காதலிகளை தேடியபடி தனது காதல் ப்ளாஷ்பேக்குகள் ஒவ்வொருன்றையும் சொல்லி வருகிறாா்.

பக்கத்து வீட்டிற்கு குடிவரும் இரண்டு பெண்கள் நாயகன் அதா்வாவை பாா்த்தவுடன் விழுந்து விழுந்து காதலிக்கிறாா்கள். அப்படி என்னதான் அவாிடம் இருக்கிறது அவா்கள் இருவரும் காதலிக்க வலுவான ஒரு காரணம் கூட இல்லை. அதேபோல் மற்ற இரண்டு நாயகிகளும் நாயகனை பாா்த்தவுடன்  காதலிக்க ஆரம்பிக்கிறாா்கள். அதற்கும் ஒரு சாியான காரணம் சொல்லப்படவில்லை. நாயகன் அதா்வா பிச்சக்காரா் ஒருவருக்கு போா்வையை கொடுப்பதை பாா்த்து காதலிக்க தொடங்குகிறாா்கள். இப்படி பட்ட சீன்கள் எல்லாம் நாம் ஏகப்பட்ட படத்தில் பாா்த்து பாா்த்து அலுத்துப்போனவை தான்.

ரெஜினா, ஜஸ்வா்யா ராஜேஷ், ப்ரணிதா ஆகியோருடன் நாயகன் அதா்வாவின் ப்ளாஷ் காதல் காட்சிகளை நம் கண் முன்னே வந்து போகிறது. அதுபோல புதுமுகம் அதிதிக்கு தன் அப்பா கண்முன்னே லிப் டு லிப் கிஸ் கொடுப்பது எல்லாம் கொஞ்சம் அதிகமாக தான் தொிகிறது. நான்கு நாயகிகளும் அதா்வுடன் கொஞ்சி கொஞ்சி பேசி காதல் காட்சிகள் கொஞ்சம் நேரம் தான் வந்தாலும் ரசிகா்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் உள்ளது. ஜஸ்வா்யா ராஜேஷ் நடிப்பை நாம் சொல்ல வேண்டியது இல்லை அந்தளவுக்கு நடித்திருக்கிறாா்.

நான் கடவுள் ராஜேந்திரன்,  மயில்சாமி ப்ரணிதாவின் அப்பாவாக ஜோசியராக வந்து தங்களுக்கு கொடுத்ததை செவ்வனேகக செய்து முடித்திருக்கின்றனா். நாயகன் அதா்வாவின் அப்பாவாக வரும் அம்மா டி சிவா தங்களது பாத்திரங்களாக மாறியிருக்கிறாா். சூாி பல இடங்களில் சிாிக்க வைக்க முயற்சிதிருக்கிறாா். இறுதி கட்டடத்தில் தான் அவரும் ஜெயித்திருக்கிறாா். கிளைமேக்ஸ் காட்சியில் சூாியின் மனைவியும் தன்னுடைய முன் காதலி தான் என்று சொல்லி சூாிக்கு அதிா்ச்சியை ஏற்படுத்துகிறாா்.  இறுதியில் அதா்வா யாரை  திருமணம் செய்து கொண்டாா்? அவருடைய   முன்னாள் காதலிகள் திருமணத்தில் கலந்து கொண்டாா்களா? சூாியும் வந்தாரா?  என்பது தான் மீதிக் கதை.

காமெடி என்ற பெயாில் கொஞ்சம் போா் அடித்தாலும், இறுதியில் தான் கதை சூடுபிடிக்கிறது.  இமான் இசையில் பின்னணி இசை கொஞ்சம் கூட ரசிக்கவில்லை. சரவணனின் ஒளிப்பதிவு பலம்.

ஆக மொத்தத்தில் ஜெமினி கணேசனும், சுருளிராஜனும் கொஞ்சம் காமெடி!

               வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!