‘கில்லி 2’-க்கு நான் தயார்! தளபதி தயாரா? தரணி கேள்வி

இளையதளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கிய ‘கில்லி’ திரைப்படம் தமிழ்திரைப்பட உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. இந்த படம் வெளிவந்த 13வது வருட கொண்டாட்டத்தை சமீபத்தில் விஜய் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடியதில் இருந்தே இந்த படம் எந்த அளவுக்கு விஜய் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் பத்திரிகை ஒன்றுக்கு இன்று பேட்டியளித்துள்ள இயக்குனர் தரணி, ‘கில்லி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை தயாராக இருப்பதாகவும், முதல் பாகத்தை விட இருமடங்கு விறுவிறுப்பாக இந்த திரைக்கதையில் நடிக்க விஜய் ஓகே சொன்னால் நாளைக்கே நான் அந்த படத்தை இயக்க தயார் என்று கூறியுள்ளார்.

‘கில்லி 2’ உறுதி செய்யப்பட்டால் அதில் நடிக்க த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜூம் ஓகே சொல்லிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இப்போது முடிவு எடுக்க வேண்டியது இளையதளபதி ஒருவர்தான். தற்போது அவர் ‘விஜய் 61’ படத்தில் பிசியாக உள்ளார். இந்த படத்தை அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. எனவே ‘கில்லி 2’ குறித்து விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.