Yelagiri : உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு போன வாலிபர் பணம் மற்றும் காரை அழகியிடம் பறி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(39). இவருக்கு திருமணமாகி 3 வயதில் மகன் இருக்கிறான். இவருக்கு, பாலியல் புரோக்கர் சீனு என்பவரின் அறிமுகம் கிடைத்தது. எனவே, அவரின் மூலம் பல பெண்களுடன் சக்திவேல் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இது பிடிக்காமல் சக்திவேலின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், சீனு மூலம் சுவேதா(26) என்கிற மாடல் அழகியை அழைத்துக்கொண்டு சக்திவேல் தனது காரில் ஏலகிரி மலைக்கு நேற்று சென்று விடுதியில் அறையில் எடுத்து தங்கியுள்ளார். அதன்பின், சக்திவேல் குளியல் அறைக்கு சென்றார். அப்போது, அவரை குளியலறையில் பூட்டிய சுவேதா சக்திவேல் வைத்திருந்த பணம் மற்றும் கார் சாவியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதன்பின் தனது செல்போன் மூலம் 100 அவசர உதவிக்கு சக்திவேல் தகவல் கொடுத்தார். அவரை போலீசார் மீட்டனர். காரைக் கடத்தி சென்று சுவேதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது சக்திவேலின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், ‘எனக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 லட்சத்தை கொடுத்துவிட்டு காரை வாங்கிக் கொள்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து சக்திவேலிடம் நடத்திய போலீசார் பல விபரங்கள் தெரியவந்தது. பாலியல் புரோக்கர் சீனுவின் உறவினர் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடம் ரூ.2 லட்சம் பணத்தை சக்திவேல் வாங்கியுள்ளார். ஆனால், கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திரும்பிக் கேட்ட சீனுவையும் சக்திவேல் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனு, மாடல் அழகி மூலம் காரை கடத்தியது தெரியவந்துள்ளது.

எனவே, போலீசார் சீனுவையும், மாடல் அழகியையும் தேடி வருகின்றனர்.