இன்னும் சற்று நேரத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் டிவிட்டரில் ட்ரண்ட் ஆக ஆரம்பித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 8 மணிக்குத் தொடங்க இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. பதட்டமான இடங்களில் போலிஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்குள்ளாகவே டிவிட்டரில் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளன.  கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது. மோடியே விடை பெறுங்கள், பொய்களின் நாயகனே விடை பெறுங்கள்’ போன்ற டுவிட்டுக்கள் பதிவாகி வருகின்றன.

மோடி தமிழகம்  மற்றும் கேரளா வரும் போது அவருக்கு எதிராகப் பரப்பப்படும் ஹேஷ்டேக்கான கோபேக் மோடி இன்று மீண்டும் ட்ரண்ட் ஆகியுள்ளது.