பிரதமர் மோடி திருப்பூருக்கு இன்று வரவுள்ள நிலையில், கோ பேக் மோடி என்கிற ஷேஷ்டேக் மீண்டும் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளது.

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை திருப்பூருக்கு வரும் போதும், அவருக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. திமுக, மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்வதும், சமூக வலைத்தளமான டிவிட்டரில் ‘கோ பேக் மோடி (GoBackModi) ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளது. அதேபோல், GoBackSadistModi என்கிற ஷேஷ்டேக் 2ம் இடத்தில் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த போதும், சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வந்த போதும் GoBackModi டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.