கோலிசோடா 2 படத்தின் டிரெய்லரை நாளை காதலா் தினத்தை முன்னிட்டு வெளியிடுகிறார்கள். இந்த டிரெய்லரை விஜய் சேதுபதி நாளை வெளியிடுகிறார்.

கோலிசோடா படத்தை 2014ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து ரசிகா்களின் வரவேற்பை பெற்றத்தோடு வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை புது கூட்டணியுடன் இணைந்து நான்கு வருடங்கள் கழித்து இயக்கி இருக்கிறார் விஜய் மில்டன். மக்களின் மனதில் ஒரு சில படங்கள் அழியாத வகையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமையும். அந்த வரிசையில் கோலிசோடா படமானது அமைந்திருந்தது.

இதையும் படிங்க பாஸ்-  குருபெயர்ச்சிதான் சிம்புவையும், மணிரத்னத்தையும் இணைத்தது: டி.ராஜேந்தர் ஆரூடம்

இந்த படத்தில் சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீன, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிருஷ்ணா, ரக்ஷிதா, ரோகிணி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலா் நடித்துள்ளனா். மேலும் முக்கிய கேரக்டரில் இயக்குா் கௌதம் வாசுதேவமேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க பாஸ்-  இந்த கேள்வியை விஜயிடமோ,சூர்யாவிடமோ கேட்பீர்களா?-கோபமான அமலா பால்

அழுத்தமான கதை மற்றும் புதிய விஷயங்களோடு வரும் கோலிசோடா 2 ரசிகா்களை கவரும் வகையில் நிச்சயமாக இருக்கும். வணிக ரீதியாகவும் இந்த படமானது மாபெரும் வெற்றி வாகை சூடும் என்ற நம்பிக்கையில் சிவப்பு களம் விரித்து காத்திருக்கிறார்கள்